(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம் லிபரல் கட்சிப் பணியில் புதிய திருப்பமாக கட்சி அங்கத்தவர்கள் ஒரு ரூபாய் நிதியினை வழங்குவதன் மூலமாகவாவது மக்களை இப்பணியில் பங்காளர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இன்று (03) அக்கட்சியின் சாய்ந்தமருது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சியின் புதிய சிந்தனை நோக்கிய பயணத்தில் ஆதரவாளர்களை திரட்டும் பணியின் அங்குரார்ப்பண நிகழ்வாகவே இன்று இந்நடவடிக்கை ஆரம்பமானது.
இங்கு கட்சியின் தலைவர் எம். இஸ்மாயீலினால் நிதி சேகரிக்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கட்சிப் போராளிகளும் நிதியினை வழங்கி வைத்தனர்.
இங்கு நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எஸ்.எல்.றியாஸ், பிரதித் தலைவர் எம்.ஐ.எச். ஜமால், தேசிய அமைப்பாளர் எம்.ஐ. இஸ்ஸதீன், இளைஞர் அணியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எம்.சீஎம். முனாஸ் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment