சரணாலயத்தில் இருந்து யானைக் குட்டியை கடத்த முயற்சி
Friday, May 2, 20140 comments
உடவலவ தேசிய சரணாலயத்தில் யானைக்குட்டி ஒன்றை கடத்திச் செல்லமுற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விஜித் வீரமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
சிலர் குறித்த சரணாலயத்தில் உள்ள யானைக் குட்டியை கடத்த முற்படுவதாக, பொலிஸ் அவசர இலக்கத்திற்கு பிரதேச மக்கள் நேற்று இரவு 9.00 மணி அளவில் தகவலளித்தனர்.
இதன்படி பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
எனினும் யானைக்குட்டியை கடத்த வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், யானையைக் கொண்டு செல்ல அவர்களால் கொண்டு வரப்பட்ட டக்டர் வண்டியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், யானைக் குட்டியை கடத்த வந்தவர்கள் சொகு வாகனங்களில் வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இதேவேளை கடத்த முற்பட்டதாக கூறப்படும் யானை உடவலவ காட்டுப் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
Post a Comment