முஸ்லிம்களுக்கு தீர்வு கிட்ட எதிர்த் தரப்புக்கு வந்து போராடுங்கள் - ஹலீம் எம்.பி (நேர்காணல்)

Thursday, May 8, 20140 comments

ஆளும் தரப்பிலிருப்பதில் அர்த்தமில்லை என்கிறார் எம்.எச்.ஏ.ஹலீம் எம்.பி


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சியில் முஸ்லிம்களுக்கு விமோசனம் கிடையாது. அரசுக்குள் இருந்துகொண்டு எமது உரிமைகளை பெற்றுக்கொள்வோம் என கூறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். இதனால் சமூகத்திற்கு பிரயோசனம் கிடையாது. அத்தோடு முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி பாராளுமன்ற அமர்வை புறக்கணிப்பது தீர்வாகாது. எதிர்த்தரப்பு வரிசையில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை கண்டித்து அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து எமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஹாரிஸ்­ப­துவ தொகு­தியின் அமைப்­பா­ள­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அவருடனான விஷேட நேர்­காணலை நம்மவன் இணைய பார்வையாளர்களுக்காக தருகிறோம்.

நேர்கண்டவர்கள்:
எஸ்.என்.எம்.ஸுஹைல்
எம்.எம்.மின்ஹாஜ்



நம்மவன்: கசினோ இலங்கையில் சட்டரீதியாக கொண்டு வரப்போவதாக ஐ.தே.க. குற்றம் சுமத்துகிறது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

ஹலீம் எம்.பி.: செயல் நுணுக்க  அபி­வி­ருத்தி கருத்­திட்ட கட்­ட­ளைகள் சட்­டத்­தி­னூ­டாக ஜெம்ஸ் பெக்கரின் கசி­னோவை நாட்­டுக்குள் சட்­ட­மாக்கும் திட்­டத்தை அர­சாங்கம் கொண்­டு­வந்­துள்­ளது. இது இஸ்லாம் மதத்­திற்கு மட்­டு­மல்ல பௌத்த மதத்­திற்கும் இலங்­கையின் கலா­சா­ரத்­திற்கும் விரோ­த­மா­ன­தாகும். இதனை நான் முற்றாக எதிர்க்கிறேன்.

நம்மவன்: கசினோ தொடர்பில் பொது பல சேனா மௌனம் சாதிக்கிறதே?

ஹலீம் எம்.பி.: பொது பல­சேனா அமைப்பு 'நாட்டைப் பாது­காப்­ப­வர்கள் நாம்' என்றும் 'பௌத்­தத்தை பாது­காக்­கின்றோம்' எனவும் கூறிக்­கொண்டு உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பொலி­ஸா­ராக செயற்­ப­டு­கின்­றனர். இவர்கள் கசினோ தொடர்பில் மௌனம் காப்­பது எமக்கு பல வித­மான சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இவர்கள் வெறு­மனே இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே செயற்­ப­டு­கின்­றனர்.

நம்மவன்: முஸ்லிம் எம்.பி.க்கள் பலரும் இதற்கு ஆதரவளித்துள்ளனரே?
ஹலீம் எம்.பி.:  அர­சாங்­கத்­தி­லுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்த திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­துள்­ளனர். முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கி­ர­ஸ் ஆகி­யன வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாது இருந்­தன. இவர்கள் எதிர்த்து வாக்­க­ளித்­தி­ருந்தால் அர­சுக்கு பேரி­டி­யாக இருந்­தி­ருக்கும். அர­சுக்கு ஆத­ர­வா­கவே இவர்கள் வாக்­க­ளிப்பை புறக்­க­ணித்­தனர். ஜாதிக ஹெல உறு­மய தைரி­ய­மாக இத்­திட்­டத்தை எதிர்த்தது. ஆனால் அர­சுடன் உள்ள 16 முஸ்லிம் எம்.பி.களுக்கு முதுகெலும்பில்லை. நானும் கபீர் ஹாசிம் எம்.பி.யும் மட்டுமே முஸ்லிம்கள் சார்பில் இத்திட்டத்தினை எதிர்த்துள்ளோம்.

நம்மவன்: பொது பல சேனா­வினர் முஸ்லிம் தலை­மை­களை குறி­வைத்து தொடர்ச்­சி­யாக தாக்கிப் பேசு­கின்­ற­னரே?

ஹலீம் எம்.பி.: அமைச்சர் ஹக்கீம் எனக்கு அர­சியல் ரீதி­யாக மாறு­பட்ட கருத்­து­டை­ய­வ­ராக இருக்­கலாம். ஆனால் அவர் அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்கும் அமைச்சர். அது­போன்றே ரிஷாட் பதி­யு­தீனும் முக்­கிய அமைச்­ச­ராவார். இவர்கள் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாவர். பிக்­குகள் மதிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள். நாமும் அவர்­களை மதிக்­கின்றோம். ஆனால் பொது பல சேனா அமைப்­பினர் அமைச்­சர்­களை மிரு­கங்­களின் பெயர்­களை கூறி தரக் குறை­வாக தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­களில் அழைக்­கின்­றமை மோச­மான செயற்­பா­டாகும். இதன்­போது அர­சாங்கம் எந்த நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­காது வெறு­மனே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. இதனை நான் வன்­மை­யாக கண்­டிக்­கிறேன்.

நம்மவன்: இவ்­வா­றான கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் அடுத்த தேர்­தலில் பிர­தி­ப­லிக்­குமா? 

ஹலீம் எம்.பி.: பொது பல சேனா போன்ற அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் தற்­போது அத்து மீறி­யுள்­ளன. குறிப்­பாக கண்டி மாவட்­டத்­தி­லுள்ள சில குழுக்­க­ளி­னூ­டாக முஸ்லிம் தலை­வர்­களை குறி­வைத்து மோச­மான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்­வரும் தேர்­தலில் 'ஹலீம் எம்.பி., காதர் எம்.பி. போன்­ற­வர்­க­ளுக்கு வாக்­க­ளிக்க வேண்டாம்' என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

நம்மவன்: கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் நான்கு பிர­தி­நி­தித்­துவம் கிடைத்­தது. அது இம்­மு­றையும் சாத்­தி­ய­மா­குமா?

ஹலீம் எம்.பி.: கடந்­த­முறை அர­சாங்­கத்­தி­லி­ருந்து பைஸர் முஸ்­த­பாவும் ஐக்­கிய தேசிய கட்­சி­யூ­டாக ரவூப் ஹக்­கீமும் ஏ.ஆர்.எம்.ஏ.காதரும் நானும் தெரி­வானோம். ஐ.தே.க.ஊடாக வெற்றி பெற்ற ஹக்கீம் அரசின் பக்கம் சாய்ந்து அமைச்­சுப்­ப­த­வியும் காதர் பிர­தி­ய­மைச்சு பத­வியும் பெற்­றுள்­ளனர். இந்­நி­லையில் அடுத்த தேர்­தலின் போது ஐக்­கிய தேசிய கட்­சி­யூ­டாக என்­னுடன் லாபிர் ஹாஜியார் கள­மி­றங்­க­வுள்ளார்.

ஹக்கீம் கண்டி மாவட்­டத்தில் ஐ.தே.க.வில் கள­மி­றங்­கினால் மட்­டுமே வெற்றி பெற முடியும். காதர் ஹாஜி­யா­ருக்கு அவரின் மரு­ம­கனின் தேர்தல் தோல்வி சரி­யான பாடத்தை புகட்­டி­யி­ருக்கும் என நினைக்கிறேன். அத்­தோடு பைஸர் முஸ்­தபா அரசாங்கத்தின் மத்­திய கொழும்பு அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இந்­நி­லையில் அவர் கண்­டியில் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை.

அத்­தோடு இவர்கள் மூ­வரும் கண்டி மாவட்ட மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்டு அமைச்சுப் பத­வி­களை பெற்­றுள்ள போதிலும் கண்டி மாவட்­டத்தில் குறிப்­பிட்டு சொல்லும் எவ்­வி­த­மான அபி­வி­ருத்தி பணி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அத்­தோடு ஓரிரு அமைச்­சர்­களின் வீடு­க­ளுக்­கான வீதி அபி­வி­ருத்­திகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் முஸ்லிம் பிர­தே­சங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திப்­ப­ணி­க­ளுக்கு பிறகு அங்கு எவ்­வித அபி­வி­ருத்­தி­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. திட்­ட­மி­டப்­பட்டு புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளது.

நம்மவன்: நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் செயற்­பா­டு­களை கண்­டித்து பாரா­ளு­மன்­றத்தை புறக்­க­ணிக்க போவ­தாக தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட்­டது. இது தொடர்பில் உங்­க­ளு­டைய நிலைப்பாடு என்ன?

ஹலீம் எம்.பி.: மக்­களின் பிரச்­சி­னை­களை பேசு­வ­தற்­கான இடம்தான் பாரா­ளு­மன்றம். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பொது பல சேனா உட்­பட கடும்­போக்கு அமைப்­புகள் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களை கண்­டித்து ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ரம சிங்ஹ, மக்கள் விடு­தலை முன்­னணி, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட கட்­சிகள் குரல் எழுப்­பி­யுள்­ளன.

அர­சாங்­கத்­திற்கு உள்ளே இருந்து கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு சேவை செய்­யலாம், அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்­கலாம், உரி­மை­களை வென்று கொடுக்­கலாம் என அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள்,  ஹக்கீம் உட்­பட முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­க்கா­ரர்கள், ரிஷாத் உட்­பட அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சி­யினர், அதா­வுல்லாஹ் உட்­பட தேசிய காங்­கிரஸ் கட்­சி­யினர் அடிக்­கடி மக்­க­ளிடம் கூறி வரு­கின்­றனர்.

16 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சுடன் இருக்­கின்ற நிலையில் முஸ்­லிம்­களின் உரி­மை­களை மீறும் வகையில் கடும்­போக்­கா­ளர்கள் செயற்­ப­டு­கின்­றனர். என்­று­மில்­லா­த­வாறு முஸ்­லிம்கள் பிரச்­சி­னைக்குள் சிக்­கி­யுள்­ளனர். இதனை இவர்­களால் தடுக்க முடி­யா­துள்­ளது. இப்­ப­டியா முஸ்­லிம்­களின் உரி­மையை பாது­காப்­பது.

அத்­தோடு அபி­வி­ருத்தி திட்­டங்­களில் முஸ்லிம் பிர­தே­சங்கள் திட்­ட­மி­டப்­பட்டு புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றன. இவர்கள் அர­சுடன் இருப்­பதால் எந்த பிர­யோ­ச­னமும் இல்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் நடை­பெறும் போதும் பாரா­ளு­மன்­றத்தில் இவர்­களால் பேச­மு­டி­ய­வில்லை. இந்­நி­லையில் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை புறக்­க­ணிப்­பதால் எவ்­வித பயனும் கிடை­யாது. இந்த அர­சாங்­கத்தின் ஆட்­சியில் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டிப்பதாயின் எதிர் கட்சிக்கு வாருங்கள். எதிர்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும். முஸ்லிம் பிரதேசங்களுக்கும் அபிவிருத்தி பணிகள் சமமாக முன்னெடுக்க பட வேண்டும் என போராட முடியும்.

தொடர்ந்தும் இந்த அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம் என மக்களை ஏமாற்றிக் கொண்டு சுகபோகங்களை அனுபவிக்க முடியாது. மக்கள் தற்போது விழிப்பாக இருக்கின்றனர். நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை பொறுத்துக்கொண்டிருக்கின்றனர்.

நம்மவன்: முஸ்லிம்­க­ளு­டைய பிரச்­சி­னைகளை தீர்த்து வைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்­சியின் கரி­சனை எப்­ப­டி­யி­ருக்­கி­றது?

ஹலீம் எம்.பி.: எமது கட்­சி­யா­னது சகல தரப்­பி­ன­ரையும் சம­மாக பார்க்கும் ஒரு தேசிய கட்­சி­யாகும். இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளின்­போது கட்சித் தலைவர் உட்­பட எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் குரல் எழுப்­பி­யுள்­ளனர். அத்­தோடு முஸ்­லிம்­க­ளுக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்க வீதியில் இறங்கி போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ளது. அத்­தோடு கொழும்பில் முஸ்­லிம்­களின் வீடுகள் உடைக்­கப்­பட்டு காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்ட போது மக்­க­ளுக்கு அதற்­கு­ரிய இழப்­பீடு அல்­லது மாற்­றி­டங்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யி­லான நட­வ­டிக்­கைளை மேற்­கொள்ள மக்­க­ளுக்கு உதவி­யாக இருந்­துள்­ளது.

இந்த அர­சாங்­கத்தால் இப்­பி­ரச்­சி­னை­களை தீர்க்க முடி­யாது. எனவே அடுத்த தேர்­தலில் முஸ்லிம், தமிழ்,  சிங்கள மக்களின் ஆதரவுடன் மக்களுக்கான மக்களாட்சியொன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham