ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு பஹ்ரேன் மன்னர் அஹமட் பின் ஷா அல் கலிபா அந்நாட்டின் உயர் விருதான கலீபா பட்டம் வழங்கிக் கௌரவித்தமையானது இலங்கை முஸ்லிம்களுக்குக் கிடைத்த மாபெரும் கௌரவமாகும் என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரபுலகத்தோடும் முஸ்லிம் நாடுகளோடும் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் ஒருவராவார். எல்லா சந்தர்ப்பங்களிலும் சர்வதேச ரீதியிலான தொடர்பாடல்களின் போது அரபு நாடுகள் இலங்கைக்கும் ஜனாதிபதிக்கும் தமது ஒத்துழைப்பை நல்கி வருகின்றன.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய விருதின் மூலம் மகா சங்கத்தினரும் பெரும்பாலான பௌத்த மக்களும் மகிழ்வுறும் அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் மனநிலையையும் நல்லெண்ணங்களையும் ஐக்கியமான செயற்பாடுகளையும் புரிந்து கொள்ளாத சிலரும் இதன் மூலம் தமது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
Post a Comment