நாட்டில் தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் கையெப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இக்கடிதத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வரும் ஏ.ஆர்.எம்.ஏ. காதரும் கையொப்பமிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடிதத்தை தயாரித்த முஸ்லிம் சிவில் சமூக அமைப்பொன்றே பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பங்களை பெற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தெடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வடக்கில் முஸ்லிம்களினம் மீள்குடியேற்றம் தொடர்பில் இதுவரை எவ்விதமான திட்டங்களும் வகுக்கப்படவில்லை எனவும் மக்கள் தமது சுய விருப்பின் பேரில் குடியேறும் போது பல தடைகள் ஏற்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக முஸ்லிம் அமைப்புகளினதும் முஸ்லிம் நாடுகளினதும் உதவியுடன் சில இடங்களில் மீள்குடியேற்றத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. பொது பல சேன, சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புக்கள் இதனை திரிபுபடுத்தி இனவாத சாயம் பூசி பிரச்சிடனைகளை ஏற்படுத்துவதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுபலசேனா, சிங்கள இராவய போன்ற பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், மதஸ்தலங்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த விடயத்தில் ஜனாதிபதியின் தலையீட்டைக் கோரியும் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌஸி,.பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும் அக்கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஸிம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோரும் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
அமைச்சர்களான ரவூக் ஹக்கீம், பஷீர் சேகுதாவுத் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்களான ஹஸன்அலி, எம்.எச்.எம்.ஹரீஸ், பைஸல் காசிம், எம்.எஸ்.தௌபீக், பாரூக் பாவா முத்தலிப், எம்.எஸ்.எம்.அஸ்லம் போன்றோரும் அக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளும் தேசிய காங்கிரஸின் தலைவரும் அமைச்சரும்மான ஏ.எல்எம் அதாவுல்லாஹ்வும் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
எனினும் ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வருக்கு குறித்த கடிதத்தில் கையொப்பமிடுவதற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டபோது தற்போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவு இக்கடிதம் அவசியமற்றது எனவும் தெரிவித்துள்ளார். அத்தேடு கண்டி மாவட்டத்தில் ஐ.தேக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அரசின் பக்கம் தாவி பிரதியமைச்சு பதவியையும் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம்.ஏ காதர் இக்கடிதத்தில் கையொப்பமிட ஆர்வம் காட்டாது நழுவிக்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை கடந்தவாரம் கசினோ தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றிற்கு கொண்டு வரப்பட்ட போது ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஸிம் மற்றும் ஹலீம் ஆகியோர் மட்டுமே எதிராக வாக்களித்தனர்.
அத்தேடு முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகியன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஆளும் தரப்பில் உள்ள அமைச்சர பவுஸி, பிரதியமைச்சர்களான காதர், பைஸர் முஸபுதபா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஸபுவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
இஸ்லாமிய கோட்பாட்டுக்கு மாற்றமான இத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் முஸபுலிம் மக்கள் அதிர்ப்தியடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Post a Comment