பாலியல் வன்முறைகள் குறித்த லண்டன் மாநாட்டில் இலங்கை விவகாரம் - பீதியில் அரசாங்கம்
Monday, May 5, 20140 comments
பாலியல் வன்முறைகள் தொடர்பில் அடுத்த வருட முற்பகுதியில் லண்டனில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான மாநாடு தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கை அரசாங்கம் அச்சமடைந்திருக்கின்றது. இலங்கை அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் பாலியல் வல்லுறவும், பாலியல் வன்முறைகளும் இலங்கையில் பெருமளவுக்கு இடம்பெறுவதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. இந்தப் பின்னணியில் அடுத்த மாத ஆரம்பத்தில் நடைபெறப்போகும் இந்த மாநாட்டில் இலங்கையில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என இலங்கை அஞ்சுகின்றது.
நெருக்கடிகளின்போது பாலியல் வன்முறைகள் குறித்த விவகாரங்களைக் கையாள்வதற்கான ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விஷேட பிரதிநிதி ஸனீப் பங்குரட்ட, இலங்கையில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக தாம் கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஐநா.வுக்கான இலங்கையின் விஷேட பிரதிநிதி பாலிக கோகணவின் கவனத்துக்கும் அவர் கொண்டுவந்திருந்தார். நெருக்கடிகளின் போது பாலியல் வன்முறைகள் இடம்பெறும் 21 நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் அவர் அண்மைய அறிக்கை ஒன்றில் வகைப்படுத்தியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Post a Comment