எம்.எச்.370 மலேசிய விமானம் கடத்தல்: அல் - கொய்தாவுடன் தொடர்புடைய 11 பேர் கைது
Monday, May 5, 20140 comments
மலேசிய எம்.எச். 370 விமானம் காணாமல் போனமைக்கு பின்னணியில் இருந்த சந்தேகத்தில் அல் - கொய்தாவுடன் தொடர்புடைய 11 பே.ரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம் நாடுகளில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த புதிய குழுவொன்றின் உறுப்பினர்களென நம்பப்படும் இந்த 11 பேரும் தலைநகர் கோலாலம்பூரிலும் கெடாஹ் மாநிலத்திலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.
எப்.பி.ஐ. மற்றும் எம்.16 உள்ளடங்கலான சர்வதேச புலனாய்வாளர்களின் கோரிக்கையையடுத்தே மாணவர்கள் வழமைக்கு மாறான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இளம் கைம்பெண் உயர் தொழில் உத்தியோகத்தர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்படி குழுவினரை மலேசிய அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் 22 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்களாவர்.
அவர்களிடம் காணாமல் போன எம்.எச்.370 விமானம் தொடர்பில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
எம்.எச்.370 விமானத்தில் பட்டியல் படுத்தப்படாத நிலையில் ஏற்றப்பட்டிருந்த 2.3 தொன் சரக்கு தொடர்பில் மலேசிய விமான சேவை தரவுகளை வெளியிட மறுத்துள்ளமை பல்வேறு ஊகங்களை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சரக்குகளின் மத்தியில் 200 கிலோகிராம் லிதியம் பற்றறி இருந்ததை அந்த விமானசேவை ஒப்புக் கொண்டுள்ள போதும் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளுடன் தொடர்புபட்ட சட்டக் காரணங்களுக்காக அது தொடர்பில் மேலதிக விபரங்களை வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளது.
எம்.எச். 370 விமானம் போராளிகளால் திசை திருப்பப்பட்டிருப்பதற்கான சாத்தியம் குறித்து சர்வதேச புலனாய்வாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவதாகவும் அதன் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத குழு தொடர்பில் பரந்தளவான அறிக்கையொன்றை அவர்கள் கோருவதாகவும் மலேசிய தீவிரவாதத்துக்கு எதிரான விசேட பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment