நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களும் ஆரம்பிக்க முடியாது: திஸாநாயக்க
Thursday, May 1, 20140 comments
பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியின்றி எதிர்காலத்தில் நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களும் ஆரம்பிக்க முடியாது என அமைச்சின் செயலாளர் எம்.கே.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய மக்கள் குடியேற்றங்கள் ஏற்படும் இடங்களில் வணக்க ஸ்தலங்களும் ஏற்படுத்தப்படுவது வழமை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்குள் 20 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள்.
புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
சட்டத்திற்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நாட்டு மக்கள் தாம் விரும்பியபடி தமது மதங்களை பின் பற்றும் உரிமை இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment