மஸ்ஜிதுகளில் பணிபுரிவபவர்களும் சம்பளமும்
Thursday, May 1, 20140 comments
மஸ்ஜிதுகளில் பணிபுரியும் கதீபுமார்கள், முஅத்தின்கள், குர்ஆன் மதரசாக்களில் ஓதிக் கொடுக்கும் ஹஸரத் மார்களுக்கான சம்பளங்கள் கொடுப்பனவுகள் சேவைக்காலத்திற்கு பின்னரான கொடுப்பனவுகள், விடுமுறை நாட்கள், ஓய்வூதியங்கள் போன்ற விவகாரங்கள் குறித்த ஒரு தெளிவான சட்டதிட்டங்கள், நியமங்கள், தராதர கட்டுக் கோப்புகள், சட்டரீதியிலான உத்தரவாதங்கள் என்பவற்றை அகில இலங்கை ஜம்மியாதுல் உலமா, முஸ்லிம் சமய விவகார அமைச்சுடனும், வக்பு சபையுடனும் தொடர்பு கொண்டு முறையான ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
முஸ்லிம் சமய விவகார திணைக்களம் தற்பொழுது பௌத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதனால் எதிர்காலத்தில் மீண்டும் அதற்குரிய அமைச்சு அந்தஸ்த்தை பெற்றுக் கொள்வது குறித்து முஸ்லிம் அரசியல் குழுக்கள் கவனம் செலுத்தல் வேண்டும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பொழுது தத்தமது அரசியல் விஞ்ஞாபனத்தில் இந்த நிபந்தனையையும் சிறுபான்மை சமூகங்கள் உள்ளடக்கிக் கொள்வது கவனத்திற் கொள்ளபப் படல் வேண்டும்.
ஏனைய மதகுருமாருக்கும், சமய கற்கை பீடங்களுக்கும், வழிபாட்டுத் தளங்களுக்கும் வழங்கப் படுகின்ற வரப்பிரசாதங்கள்,சலுகைகள், உரிமைகள், மற்றும் இன்னோரன்ன உத்தரவாதங்கள் குறித்து சிறுபான்மை இனத்தவரும் அறிந்து வைத்திருத்தல் காலத்தின் கட்டாயமாகும்.
Post a Comment