இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நுவான் குலசேகரவின் அதிரடி துடுப்பாட்டத்திலும் அபார பந்துவீச்சிலும் 79 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டுப்லின் க்லொன்ட்ரப் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய முதலாவது ஒருநாள் போட்டியின் நானயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சர்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசால் பெரேரா எந்தவொரு ஓட்டங்களும் பெறாமல் அரங்கு திரும்பினார். நீண்ட இடைவெ ளியின் பின்னர் சர்வதேச போட்டியொன்றில் வாய்ப்பு கிடைத்த உபுல் தரங்க 24 ஓட்டங்களையும் சந்திமல் 39 ஓட்டங்களையும் அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் 30 ஓட்டங்களையும் அஷான் பிரியஞ்சன் 31 ஓட்டங்களையும் நுவான் குலசேகர 34 பந்துகளுக்கு 42 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுசேர்த்தனர். பந்து வீச்சில் அயர்லாந்து அணிசார்பாக முர்டக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை பெற்றது.
220 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 39.5 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 140 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இயர்லாந்து சார்பில் போர்ட்டபில் 37 ஓட்டங்களையும் பிரேன் 33 ஓட்டங்களையும் பெற்றார். இலங்கையணியின் பந்து வீச்சில் அஜந்த மெண்டிஸ் 10 ஓவர்கள் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மல் 8 ஓவர்கள் பந்து வீசி 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நுவான் குலசேகர 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 8 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்டநாயகனாக அஜந்த மெண்டிஸபு தெரிவானார்.
Post a Comment