டுபாயில் இலங்கை இளைஞனங கடலில் மூழ்கி உயிரிழப்பு

Monday, May 26, 20140 comments


டுபாய் நாட்டுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் காயர் வீதி றிபாய் பள்ளிவாசலடியைச் சேர்ந்த முஸ்தபா ஸஹீன் (வயது 21) என்பவர்  அங்குள்ள  கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடனும் டுபாய் நாட்டில் தொழில் வாய்ப்புப் பெற்றிருக்கின்ற தனது  இரு சகோதரர்களுடனும் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை (25) கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

இவருடன்  கடலில் நீராடிக்கொண்டிருந்தவர்கள் இவரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுத்தபோதும், அது கைகூடவில்லை எனவும்   உறவினர்கள் தெரிவித்தனர்.

டுபாயிலுள்ள வைத்தியசாலையொன்றில் தற்போது வைக்கப்பட்டுள்ள சடலத்தை  இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வருடகாலமாக இவரும் இவரது சகோதரர்கள் இருவரும் டுபாயில் தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham