பொதுபலசேனா கடும்போக்கு அமைப்பின் செயலாளளர் உட்பட அவ்வமைப்பின் நான்கு உறுப்பினர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா இரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளது.
குர்ஆன் அவமதிப்பு மற்றும் அண்மையில் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெறவிருந்த ஜாதிக பலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தவிடாது அராஜகம் புரிந்தமை தெடர்பிலான வழக்கு விசாரணை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போதே இவர்கள் சரீரபிணையில் விடுவிக்கப்படுவதாக நீதிவான் தீர்ப்பளித்தார். அத்தோடு கடும்போக்கு அமைப்பான பொது பலசேனாவுக்கும் ஐாதி பல சேனாவுக்கும் நீதிவான் எச்சரிக்கைவிடுத்தார்.
இதேவேளை, இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் ஒன்பதாம் திகதி இடம்பெறவுள்ளது.
Post a Comment