மாதம்பையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி
Tuesday, April 29, 20140 comments
மாதம்பை, கல்முருவ - பல்லகலே பிரதேசத்தில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு சிறுவனுடன் குளிக்கச் சென்ற நிலையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
அயலில் இருந்தவர்கள் இரு சிறுவர்களையும் மீட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காக்கபள்ளிய, மானக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுவன் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment