ஜனாதிபதிக்கு பஹ்ரேனில் உயரிய விருது (படங்கள்)
Tuesday, April 29, 20140 comments
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பஹ்ரேன் ராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பஹ்ரேன் அரசாங்கத்தால் 'க(ப)லிபாஃ அபிதானய' எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரேன் ராச்சியத்தின் ஹமாத் பின் இசா அல் கலிபா மன்னரால் இந்த விருது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
'இலங்கை ஜனாதிபதியான தங்களும், உங்களைச் சார்ந்த நட்பு நாடுகளும், இருதரப்பு உறவுகள், அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து நாம் பெருமிதம் அடைவதுடன், நாட்டை சர்வதேச தளத்திற்கு உயர்த்த தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்று இந்த விருதை வழங்குகிறோம்' என்று பஹ்ரேன் மன்னர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது எலிசபேத் மகாராணி, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட சிலருக்கு மாத்திரமே இதுவரை இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கௌரவ விருதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 'தாம் பெருமிதத்தையும், வரபிரசாத்தை எதிர்கொண்ட மகிழ்ச்சியையும் அடைவதாக தெரிவித்தார்.
பஹ்ரேன் ராச்சியத்துடன், மிகவும் விரிவான கூட்டுறவை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்ததாக ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment