பல்கலைக் கழக சுகாதார விஞ்ஞான பீடத்தை மூடும் நிலை
Tuesday, April 29, 20140 comments
மாணவர்கள் விரிவுரைகளில் பங்கு கொள்ள தவறும் பட்சத்தில் பேராதனை பல்கலைக் கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தை மூடும் நிலை ஏற்படும் என பல்கலைக் கழக உப வேந்தர் அத்துல சேனரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு மாதங்களுக்கும் அதிக காலம் இந்த மாணவர்கள் பாடவிதானத்தை பகிஷ்கரித்து வருகின்றனர்.
எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் விரிவுரைகளில் பங்குகொள்ளத் தவறும் பட்சத்தில் இந்த பீடத்தை மூட வேண்டி வரும் என அவர் எச்சரித்துள்ளார்.
பாடவிதானம் 3 வருடங்களால் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே மாணவர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சுகாதார விஞ்ஞான விதானத்தை இடைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் நான்கு இடங்களில் உணவுதவிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பேராதனை பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்கள் உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து 126 நாட்களாகின்றன நிலையில் காலி பயணிகள் பேரூந்து நிலையத்தில் கடந்த 118 நாட்களாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தவிர, கொழும்பு கோட்டை, பல்கலைக்கழக மானிய குழு காரியாலயத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலும் இந்த போராட்டம் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு இலங்கை ஆசிரயர் சங்கமும் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment