பொதுபல சேனாவுக்கு முஸ்லிம் கவுன்சில் சவால்

Tuesday, April 29, 20140 comments


அமெரிக்காவில் இருந்து நிதி பெற்றுக் கொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், பொதுபல சேனா அமைப்புக்கு சவால் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பு அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் அமரிக்காவிடம் இருந்து நிதி பெற்று வருவதாக பொதுபலசேனா அண்மையில் குற்றம் சுமத்தி இருந்தது.

இந்த நிலையில் இதற்கு ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால் அதனை உடனடியாக முன்வைத்துக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் சவால் விடுத்திருக்கிறது.

பொதுபலசேனா இலங்கையில் அனைவராலும் மதிக்கப்படும் பௌத்த உடையில் இருந்து கொண்டு அடாவடித்தனங்களை புரிந்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham