இலங்கையில் சிங்கள முஸ்லிம் கடும்போக்கு அமைப்புக்கள் இயங்குகின்றன – வாசுதேவ
Tuesday, April 29, 20140 comments
இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் கடும்போக்குடைய அமைப்புக்கள் இயங்கி வருவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்து கடும்போக்குடைய அமைப்புக்கள் இலங்கையில் கிடையாது என்றே கருதுவதாகவும், இந்தியாவில் இவ்வாறான அமைப்புக்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கத்தை ஓர் கடும்போக்குடைய அமைப்பாகவே அடையாளப்படுத்துவதாகவும், கடும்போக்குடைய அமைப்புக்கள் அனைத்தையும் அடையாளப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வன்முறைகளைத் தூண்டும் வகையில் கடு;ம்போக்குடைய கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியும் எனவும், பொதுபல சேனா அமைப்பை இதன் அடிப்படையிலேயே தடை செய்யுமாறு கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவிற்கு எதிராக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா போன்ற இயக்கங்களுடன் விவாதம் நடாத்த வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்hளர்.
Post a Comment