தாக்குதல் குறித்து ஐ.தே.க. சர்வதேசத்திற்கு அறிக்கை
Tuesday, April 22, 20140 comments
மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பம் தொடர்பில் சர்வதேசத்திடம் அறிக்கையிடவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்தார்.
தமது கட்சி உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த சம்பவம் குறித்து அத தெரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் மீது கடந்த 17ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment