வட்டரக்க விஜித்த தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
Tuesday, April 22, 20140 comments
ஜாதிக பலசேனா அமைப்பின் வட்டரக்க விஜித்த தேரருக்கு தேரர்கள் உட்பட சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மஹியங்கனை பிரதேச சபைக்கு முன்பாக இன்று (22) முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டரக்க தேரர் வேற்று மதத்தவர்களுடன் இணைந்து பௌத்த மதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினராக உள்ள வட்டருக்க விஜித்த தேரர் இன்று (22) பிரதேச சபை அமர்வுக்கு சென்ற போது அவரை உட்செல்ல விடாது தடுத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பொலிஸாரிடம் பாதுகாப்பில் வட்டருக்க தேரர் பின் கதவு வழியாக உள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் கொழும்பில் ஜாதிக பல சேனாவினரால் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அடாவடித்தனம் புரிந்த சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்தியிருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment