காத்தான்குடி சுஜாவின் இயக்கத்தில் உருவான 'கேள்விக்குறி' குறுந்திரைப்பட வெளியீடு மே மாதம் 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மணடபத்தில் இடம்பெற உள்ளது.
பல்வேறு சிரமங்கள், தடைகள், இடையூறுகளைத் தான்டி இவ் வெ ளியீட்டு நிகழ்வு இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் எமது கலைஞர்களின் சிறப்பு நகைச்சுவை நாடகங்கள், பாடல்கள் பல சுவையான கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
கேள்விக்குறி குறுந்திரைப்படமானது வறுமையில் வாடும் சிறுவர்களுக்கு சமர்ப்பணமாய் அவர்களது அடிமட்ட வாழ்வை எடுத்துக்காட்டும் கதைக்கருவைக் கொண்ட அமைக்கப்பட்டுள்ளது மேலும் காத்தான்குடியில் இருந்நது வெளிவரும் முதல்க் குறும்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்குழுவின் முதல்ப் படி நகர்வான இந் நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து முழு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் வரவேற்கின்றனர்

Post a Comment