உலகக் கிண்ண இலங்கை வசம்: தேசத்திற்கு பெருமை

Sunday, April 20, 20140 comments


எஸ்.என்.எம்.ஸுஹைல்

இலங்கை அணி இறு­தி­ப்போட்­டிக்கு தகு­தி­பெ­று­வது, கிண்­ணத்தை இழப்­பது என்று பல தட­வைகள் இலங்கை கிரிக்கெட் ரசி­கர்­களை ஏமாற்­றி­விட்­டது. இருப்­பினும் இலங்கை ரசி­கர்கள் சோர்ந்து போக­வில்லை. தொடர்ச்­சி­யாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு தமது ஆத­ர­வினை வெளிக்­காட்டி உட்­சா­க­மூட்டி வந்­தனர். 18 வருட காலம் சுமந்திருந்த ஏமாற்­றங்­களை  இலங்­கையின் கிரிக்கெட் சிங்­கங்கள் போக்­கி­விட்­டன. இந்த வெற்றி தேசத்தின் வெற்­றி­யாக நாடெங்கும் கொண்­டா­டப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி 5 ஆவது உலக கிண்ண போட்­டிகள் ஆரம்­ப­மா­கின. முதற்­கட்­ட­மாக தகு­திகாண் போட்­டி­க­ளுக்­காக குழு 'ஏ' யில் பங்­க­ளாதேஷ், ஆப்­கா­னிஸ்தான், ஹொங்கொங், நேபால் ஆகிய ஆசிய நாடுகளும்  குழு 'பி' யில் நெதர்­லாந்து, அயர்­லாந்து, சிம்­பாவே, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகள் மோதின. அச்சுற்றிலி­ருந்து பங்­க­ளாதேஷ் மற்றும் நெதர்­லாந்து அணிகள் தகுதி பெற்­று 'சுபர் டென்' அணி­களுள் இடம்­பி­டித்­தன.

பின்னர் இலங்கை, நியு­ஸி­லாந்து, தென்­னா­பி­ரிக்கா, இங்­கி­லாந்து, நெதர்­லாந்து அணிகள் குழு ஒன்­றிலும் இந்­தியா, பாகிஸ்தான், அவுஸ்­தி­ரே­லியா, மேற்­கிந்­திய தீவுகள் மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் குழு இரண்­டிலும் இடம்­பி­டித்­தன. இவ்­விரு குழு­க்க­ளுக்­கி­டையில் இடம்­பெற்ற லீக் போட்­டி­க­ளுக்­க­மைய அறை­யி­றுதி போட்­டிக்கு குழு '1' இருந்து இலங்கை அணியும் தென்­னா­பி­ரிக்கா அணியும் குழு '௨' இல் இருந்து இந்­திய அணியும் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணியும் தகு­தி­பெற்­றன.

ஆரம்­பத்தில் முதல் இரண்டு போட்­டி­க­ளிலும் தென்­னா­பி­ரிக்கா மற்றும் நெதர்­லாந்து அணி­க­ளுக்­கெ­தி­ராக வெற்­றியை சுவைத்த இலங்கை அணி, இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ராக அதிர்ச்சி தோல்­வி­ய­டைந்­தது. இதன்­போது அறை­யி­று­திக்­கான நம்­பிக்­கை­யி­ருந்த போதிலும் நியு­ஸி­லாந்து அணிக்­கெ­தி­ராக கட்­டாயம் வெற்­றி­பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இலங்கை தள்­ளப்­பட்­டது. இப்­போட்­டியில் எதிர்­பா­ராத விதத்தில் ரங்கன ஹேரத்தின் அபார பந்து வீச்சால் பெரு வெற்­றியை பெற்­றது இலங்கை..

அறை­யி­று­திக்கு தகு­தி­பெற்ற நிலையில் அப்­போ­தைய நடப்பு சாம்­பி­யனும் அதி­ரடி துடுப்­பாட்­டக்­கா­ரர்கள் மற்றும் அச்­சு­றுத்தும் பந்­து­வீச்­சா­ளர்­களை கொண்ட மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணியை எதிர்­கொண்­டது இலங்கை அணி. இப்­போட்டி பெறும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. எனினும் இலங்கை அணி­யி­னரின் வெற்­றிக்­கான வியூ­கத்தில் மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் அணி தோற்­றுப்­போ­னது. அத்­தோடு அன்­றைய தினம் பெய்த ஐஸ் கட்டி மழையும் போட்­டியின் சுவா­ரஸ்­யத்தை குறைத்­து­விட்­டது. இதே­வேளை இந்­தியா மற்றும் தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யிலான போட்­டியில் இந்­திய அணி வெற்­றி­பெற்று இறு­திப்­போட்­டிக்கு தெரி­வா­னது.

இந்­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (06) பர­ப­ரப்­பான இறு­தி­போட்­டியில் இந்­திய அணியை எதிர்­கொண்­டது இலங்கை அணி. மிர்­பூரில் இடம்­பெற்ற இந்த போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றிப்­பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடும் சந்­தர்ப்­பத்தை இந்­திய அணிக்கு வழங்­கி­யது.

இதன்­படி, துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­திய அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 4 விக்­கட்­டுக்­களை இழந்த நிலையில் 130 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்­றது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி 17.5 ஓவர்­களில் 4 விக்­கட்­டுக்­களை மாத்­திரம் இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்­தது.



தமது இறுதி இரு­ப­துக்கு இரு­பது போட்­டியில் விளை­யா­டிய, முன்னாள் அணி தலை­வர்­க­ளான குமார் சங்­க­கார ஆட்­ட­மி­ழக்­காமல் 52 ஓட்­டங்­க­ளையும், மஹேல ஜன­வர்­தன 24 ஓட்­டங்­க­ளையும் பெற்று வெற்­றிக்கு வழி­வ­குத்­தனர்.



இந்த வெற்­றியின் மூலம் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தை இலங்கை அணி முதல் முறை­யாக வெற்­றிக்­கொண்­டது.

2009ஆம் 2012ஆம் ஆண்­டு­களில் இரு­ப­துக்கு 20 உலக கிண்ண இறுதி போட்­டிக்கு இலங்கை அணி தகுதி பெற்­றி­யி­ருந்த நிலை­யிலும்  கிண்­ணத்தை சுவீ­க­ரிக்க முடி­யாது போனது.

இந்த நிலையில், 1996ஆம் ஆண்டு இலங்கை அணி உலக கிண்­ணத்தை கைப்­பற்றி இருந்த நிலையில், 18 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உலக கிண்ணம் ஒன்றை இலங்கை அணி தற்­போது கைப்­பற்­றி­யுள்­ளது.

இது­வரை இடம்­பெற்ற இரு­ப­துக்கு-20 உலகக் கிண்­ணத்தை முறையே இந்­தியா, பாகிஸ்தான், இங்­கி­லாந்து, மேற்­கிந்­தி­யத்­தீ­வுகள் ஆகிய அணிகள் கைப்­பற்­றி­யுள்­ளன.

இந்­நி­லையில் இந்த இரு­ப­துக்கு -20 உலகக் கிண்ண போட்­டி­களில் பல சாத­னைகள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன. அந்த வகையில் பல சாத­னை­க­ளுக்கு சொந்­த­மாக இலங்கை அணியும்  அவ்­வணி வீரர்­களும் காணப்­ப­டு­கின்­றனர்.

இதன்­படி நோக்கும் போது இரு­பது ஓவர் உலகக் கிண்ண போட்­டியில் அதிக ஓட்­டங்­களை குவித்த வீரர், அதிக விக்­கெட்­டு­களை வீழ்த்­திய வீரர் என்ற பெரு­மையை இலங்கை அணி வீரர்­களே பெற்­றுள்­ளனர்.

இது­வரை 31 இரு­ப­துக்கு 20 உலக கிண்ண போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள மஹேல ஜெய­வர்­தன, 1016 ஓட்­டங்­களை குவித்­துள்ளார். இதுவே இரு­ப­துக்கு -20 உலகக் கிண்ண போட்­டியில்  ஒரு வீரரின் அதி­க­பட்ச மொத்த ஓட்­டங்கள் ஆகும். இதில் ஒரு சதம், 6 அரை­ச­தங்கள் அடங்­கு­கின்­றன.



இதே­வேளை, அதிக விக்­கெட்­டு­களை வீழ்த்­திய வீரர்கள் பட்­டி­யலில் இலங்­கையின் லசித் மலிங்க முத­லி­டத்­தி­லுள்ளார். 31 போட்­டி­களில் விளை­யாடி 38 விக்­கெட்­டு­களை அவர் வீழ்த்­தி­யுள்ளார்.

அணி­களின் சாத­னை­யிலும் இலங்கை முத­லிடம் பெற்­றுள்­ளது. 2007 ஆம் ஆண்டு இடம்­பெற்ற இரு­ப­துக்கு-20 உலகக் கிண்ணப் போட்­டியில் அதி­க­பட்­ச­மாக இலங்கை 6 விக்கெட் இழப்­புக்கு 260 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்­தது. இச் சாத­னையை கென்யா அணிக்கு எதி­ராக இலங்கை அணி படைத்­தது.



இரு­ப­துக்கு -20 உலகக் கிண்ண போட்­டியில்  மிகக் குறைந்த ஓட்­டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த சாதனை இந்த உலகக் கிண்­ண போட்டியின் போதுதான் படைக்­கப்­பட்­டது. அத­னையும் இலங்கை அணியே நிகழ்த்­தி­யி­ருந்­தது.

நெதர்­லாந்து அணி இலங்கை அணிக்கு எதி­ராக 10.3 ஓவர்­களில் 39 ஓட்­டங்­க­ளுக்குள் அனைத்து விக்­கெட்­டு­க­ளையும் இழந்­ததே மிகக் குறைந்த ஓட்ட எண்­ணிக்கை ஆகும்.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக இலங்­கைக்கு எதி­ராக நியூ­ஸி­லாந்து 15.3 ஓவர்­களில் 60 ஓட்­டங்­க­ளுக்குள் ஆட்­ட­மி­ழந்­த­மை­யாகும்.

இறுதி இரு­ப­துக்கு 20 போட்­டியில் இலங்கை அணி இந்­திய அணி­யினை தோற்­க­டித்து வெற்றிக் கிண்­ணத்தை பெற்­றுள்ள நிலையில், சர்­வ­தேச தரப்­ப­டுத்தல் வரி­சையில் இலங்கை அணி பாரிய முன்­னேற்­றத்தை கண்­டுள்­ளது. ஏற்­க­னவே ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக முத­லி­டத்தை தக்­க­வைத்­தி­ருந்த இலங்கை இந்த உல­க­கிண்ண போட்டின் போது இங்­கி­லாந்து அணி­யிடம் தேல்­வி­ய­டைந்­த­தை­ய­டுத்து இரண்டாம் நிலைக்கு பின்­தள்­ளப்­பட்­டது. எனினும் அடுத்­த­டுத்து தொடந்தும் பெற்ற ஹெற்றிக் வெற்­றியின் மூலம் மீண்டும் முத­லி­டத்தை பெற்­றுக்­கொண்­டது.

குறிப்­பாக தரப்­ப­டுத்தல் வரி­சையில் துடுப்­பாட்­டத்தில் 5வது இடத்தில் இருந்த குசல் பெரேரா, உலக தரத்தில் முதல் 10 இடத்­திற்குள் முன்­னே­றிய இலங்கை வீரர் என்ற நிலையை எட்­டி­யுள்ளார். அதே­போல அஞ்­சலோ மத்­தியு உலக தரத்தில் 41 ஆவது இடத்­திலும் உள்ளார். திசர பெரேரா மூன்று படி­களால் முன்­னே­றி­யுள்ளார். 20க்கு 20 கிரிக்கட் போட்­டி­களில் இருந்து விடை­பெறும் மஹேல ஜய­வர்­தனா 12 ஆவது இடத்­திலும், குமார் சங்­கக்­கார 17வது இடத்­தையும் பெற்­றுள்­ளனர்.

பந்து வீச்சு தரப்­ப­டுத்­தலில் லசித் மாலிங்க 13வது இடத்­திலும், ரங்­கன ஹேரத் 70வது இடத்­திலும் உள்­ளார்கள்.

இவ்­வி­டத்தில் நாம் முக்­கிய விட­ய­மொன்றை நோக்க வேண்­டி­யுள்­ளது. கடந்த ஒரு­வ­ரு­டத்­திற்கும் மேலாக முத­லி­டத்தை தக்­க­வைத்­துள்ள இலங்கை அணி வீரர்கள் தரப்­ப­டுத்­தலில் முன்­நி­லையில் இல்லை. அணியை தொடர்ந்தும் முத­லி­டத்தில் வைத்­துள்ள வீரர்­க­ளி­டத்தில் சுய­நலம் இல்லை என்­பது சுட்­டிக்­காட்டத் தக்­க­தாகும்.

இலங்கை இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்­திமல் பாராட்­டத்­தக்­கவர். ஏனெனில் சந்­திமல் தொடர்ந்தும் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்க தவ­றி­ய­மையால் தலைமைப் பத­வியை பாது­காக்­காது அணியின் வெற்­றிக்­காக அவர் செய்த விட்­டுக்­கொ­டுக்கொடுப்புக்கு ஒரு சபாஷ் சொல்­லலாம். அத்­தோடு நின்­று­வி­டாது இலங்கை அணி இறு­திப்­போட்­டியில் களத்­த­டுப்பை மேற்­கொண்ட போது விக்கட் காப்­பா­ள­ருக்கு தலை­க­வ­சத்­தையும் அவரே கொண்­டு­வந்தார். இவ்­வாறு ஒரு பணிவும் விட்­டுக்­கொ­டுப்­பு­முள்ள அணித் தலைவர் இருப்­பது நாட்­டிற்கே பெரு­மை­யாகும்.



இரு­ப­துக்கு 20 போட்­டியில் துடுப்­பாட்­டமே ஆதிக்கம் செலுத்தி வந்­தன அந்த விதி­யினை மாற்­றி­ய­மைத்­தவர் உலக கிண்ண இறுதிப் போட்­டியில் இலங்கை அணிக்கு தலைமை வகித்த லசித் மலிங்­க­வாகும்.



இம்­முறை போட்­டி­களில் இலங்கை அணிக்கு ஓர­ளவு துடுப்­பாட்டம் கைகொ­டுத்­தாலும் அதி­க­மாக பந்­து­வீச்சே கைகொ­டுத்­துள்­ளதை மறுக்க முடி­யாது.

இலங்கை கிரிக்கெட் சபையில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட மாற்­றங்கள் புரிய நிர்­வா­கத்­தி­னரின் செயற் திறன் அர்ப்­ப­ணிப்­புகள் இந்த வெற்­றிக்கு உறு­து­னை­யாக இருந்­துள்­ளன.

தெரி­வுக்­குழு தலை­வரும் முன்னாள் கிரிக்கெட் அணியின் தலைவருமான சனத் ஜய­சூ­ரிய , பயிற்­சி­யாளர் புஅல் பெப்ரக்  துடுப்­பாட்ட பயிற்­சி­யாளர் மாவன் அத்­த­பத்து, வேகப் பந்­து­வீச்சு பயிற்­சி­யாளர் சமிந்த வாஸ், சுழல் பந்­து­வீச்சு பயிற்­சி­யாளர் முத்­தைய முர­ளி­தரன் களத்­த­டுப்பு பயிற்­சி­யாளர் ருவன் கல்­பகே ஆகி­யோ­ரது பங்களிப்பு முக்கியமானதாகும்.

ஐந்­தா­வது உலகக் கிண்ண இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக தினேஷ் சந்­தி­மலும் உப தலை­வ­ராக லசித் மலிங்­கவும் செயற்­பட்­டனர். எனினும் இறுதி லீக் போட்டி, அறை­யி­ருதி போட்டி மற்றும் இறுதிப் போட்­டிக்கு லசித் மலிங்­கவே தலைமை வகித்தார். முதல் மூன்று லீக் போட்­டிக்கும் சந்­திமல் தலைமை தாங்­கினார்.




அத்­தோடு அனு­பவ வீரர்­களும் இலங்கை கிரிக்கெட் அணியின் மூம் மூர்த்­திகள் என வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளு­மான தில­க­ரத்தின டில்ஷான், மஹேல ஜய­வர்­தன மற்றும் குமார் சங்­க­கார ஆகியோர் இளம் வீரர்­களை அழ­காக வழி நடத்­தினர். குஷால் பெரேரா, திஸர பெரேரா, லகிரு திரி­மண்ணே ஆகி­யோரின் அதி­ர­டி­யான துடுப்­பாட்டம், சக­ல­துறை ஆட்­டக்­காரர் அஞ்­சலோ மத்­தி­யூஸின் நிதான ஆட்டம், ரங்­கன ஹேரத், சசித்ர சேனா­நா­யக்க, அஜந்த மெண்டிஸ் ஆகி­யோரின் சுழல் பந்­து­வீச்சு, லசித் மலிங்க, நுவன் குல­சே­கர  ஆகி­யோரின்  பந்து வீச்சின் வேகம், சுரங்க லக்மல், சீகுகே பிர­சன்ன ஆகி­யோரின் ஒட்­டு­மொத்த பங்­க­ளிப்பே இந்த வெற்­றிக்கு வழி­வ­குத்­தன.





   இறுதி போட்டி மைதா­னத்தில் இந்­திய அணிக்­கான ஆத­ர­வா­ளர்கள் அதி­க­மாக இருந்த போதிலும் இலங்கை அணி சோபிக்க தவ­ற­வில்லை. இலங்­கை­யி­லி­ருந்து விஷேட விமானம் மூலம் இறுதி போட்­டி­யன்று பங்­க­ளா­தே­ஷக்கு ரசி­கர்கள் அழைத்துச் செல்­லப்­பட்­டனர். அத்­தோடு மீபூர் மைதானத்திற்கு போட்டியை கண்டுகளிக்க அமைச்சர் ரவூப் ஹக்கீமும் சென்றிருந்தார்.  மஸ்லிம்களை பிரிதிநிதித்துவப் படுத்தி அவர் அங்கு சென்றமை வரவேற்கத்தக்கது.








சர்­வ­தேச இரு­ப­துக்கு 20 போட்­டியில் வெற்றிக் கிண்­ணத்தை சுவீ­க­ரித்த இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச, எதிர்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே ஆகியோர் தமது வாழ்த்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

இதேவேளை, ஜனா­தி­பதி தொலை­பே­சியின் ஊடாக அணியின் தலைவர் லசித் மாலிங்க, ஆட்ட நாயகன் குமார் சங்­கக்­கார மற்றும் சிறந்த துடுப்­பாட்­டக்­காரர் மஹெல ஜய­வர்­தனா ஆகி­யோரை தொடர்பு கொண்டு தமது வாழ்த்­தினை வெளி­யிட்­ட­தாக ஜனா­தி­ப­தியின் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை, 18 வருட இடை­வெ­ளிக்குப் பின்னர் உலக கிண்ணம் ஒன்றை இலங்கை அணி நாட்­டிற்கு கொண்டு வரு­வது மகிழ்ச்­சியை அளிப்­ப­தாக எதிர்­கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வாழ்த்து செய்­தியில், குமார் சங்­கக்­கார மற்றும் மஹேல ஜய­வர்­தன ஆகியோர் இணைந்து இலங்கை கிரிக்­கட்­டிற்கு அளப்­ப­ரிய பெரும் பங்­கினை வழங்­கி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இரு­ப­துக்கு இரு­பது உலகக் கிண்­ணத்தை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கட் அணி­யினர் நேற்று முன்­தினம் இலங்கை ரசி­கர்­களின் மேள தாளங்­க­ளுடன் வர­வேற்­கப்­பட்­டனர்.

விமான நிலை­யத்தில் வர­வேற்­கப்­பட்ட பின்னர் திறந்த பஸ் வண்­டி­யொன்றில் ஏற்­றப்­பட்டு நீர்­கொ­ழும்பு பழைய வீதியின் ஊடாக காலி­முகத் திட­லுக்கு அழைத்து வரப்­ப­ட்டனர்.  இங்கு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கிரிக்கட் வீரர்­க­ளுக்கு கோலா­க­ல­மான வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

உலக வெற்றிக் கிண்­ணத்தை பெற்­றி­ருக்கும் இலங்கை அணி­யி­ன­ருக்கு சர்­வ­தேச கிரிக்கட் கவுன்சில் 14கோடி ரூபாவை பரி­சாக வழங்­கி­யி­ருக்­கி­றது.

இத்­துடன், மேல­தி­க­மாக இலங்கை கிரிக்கட் சபை இந்த வீரர்­களின் சாத­னையைப் பாராட்டி மேலும் 20 கோடி ரூபாவை பரி­சாக வழங்க உள்­ளது.

இலங்­கையின் கிரிக்கட் வர­லாற்றில் இதுவே முதல் தட­வை­யாக இவ்­வ­ளவு பெருந்­தொகை கிரிக்கட் அணிக்கு அன்­ப­ளிப்­பாக கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

தற்­போது இலங்கை கிரிக்கட் வீரர்­க­ளுக்கு கொடுக்கும் சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மா­கவே இந்த அன்­ப­ளிப்பும் வழங்­கப்­ப­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

20 ஓவர் போட்­டி­களில் இருந்து ஓய்­வு­பெறும் மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்கார ஆகியோருக்காக இலங்கை கிரிக்கட் சபை இன்னுமொரு விசேட கெளரவிப்பு நிகழ்வினையும் ஒழுங்கு செய்ய உள்ளது.

கூட்டாக செயற்படுதல், ஒரு குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தமது பங்களிப்பை இதய சுத்தியோடு ஆற்றுதல், தலைமைத்துவத்திற்கு கட்டுப் படுதல், குழுவை தலைமை அரவணைத்து வழிநடாத்தல்,

ஒவ்வொரு நகர்வின் போதும் கூட்டாகவே ஆலோசனைகள் செய்து அமுலுக்கு கொண்டுவரல், தலைமை தனியாளாக எதேச்சாதிகாரமாக நடந்து கொள்ளாதிருத்தல் போன்ற பண்புகள் இலங்கை அணியின் வெற்றிக்கு கைகொடுத்துள்ளது. அத்தோடு வெற்றியிலும் தோல்வியிலும் நிதானத்தை பொறுமையை கடைபிடிப்பதில் இலங்கை அணிக்கு நிகர் இலங்கை அணியினரே.

இந்த இருபதுக்கு 20 உலக கிண்ண வெற்றி எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியதாக இருக்கின்றது. அத்தோடு 21 மில்லியன் மக்களுக்கு மற்றுமொரு உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க 18 வருடங்கள் தேவைப்பட்டன. பொறுமையிழக்காது ஆதரவாளர்கள் தொடர்ந்தும் உட்சாகப்படுத்தியமைக்கு கண்ணீரோடு நன்றி தெரிவிக்கும் இலங்கை வீரர்களின் மட்டற்ற மகிழ்ச்சி எல்லேரையும் நெகிழவைத்து விட்டது. ஆசிய கிண்ணத்தையடுத்து இருபதுக்கு 20 கிண்ணத்தை வென்றது இலங்கை. அடுத்து 2015 உலகக் கிண்ண போட்டிகளுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.








Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham