அடிதடியுடன் அரசாங்கத்தின் புது வருட வேலைகள் ஆரம்பம் - கரு

Sunday, April 20, 20140 comments



பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்கி புது வருட வேலைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல் பாரதூரமான செயல் என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் மூலம் முழு பாராளுமன்றமும் அவமரியாக்குட்பட்டுள்ளதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

தாம் மத்தல விமான நிலையம் மற்றும் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்றமை அங்குள்ள பொருளாதார நிலைமைகளை அறிவதற்காகவே என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன குறிப்பிட்டார்.

இந்த விஜயம் குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் சமர்ப்பிக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

தாம் மாகம்புர துறைமுகத்தை பார்வையிடச் சென்றபோது பிரதி பொலிஸ் மாஅதிபரிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பு கோரியதாகவும், அதன்போது பாதுகாப்பு வழங்குவதாக அவர் கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

எனினும் மத்தல விமான நிலையத்தில் தமக்கு இடையூறு ஏற்படுத்திய குழுவினரை மாகம்புர துறைமுகத்திலும் காணக்கூடியதாக இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham