மத விடயங்களுக்கான பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடும் அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய எதிர்காலத்தில் சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் போன்று மதரீதியான பொலிஸ் பிரிவுகள் ஏற்படும் பயங்கரமான சூழல் ஏற்படலாமென்றும் எச்சரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயிவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் மக்களையும் பாதுகாக்க பொலிஸ் திணைக்களம் உள்ளது.
எனவே அதற்கு மேலாக மத விடயங்களுக்கு தனியான பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
இதனை கடுமையாக எதிர்க்கின்றோம்.
கேகாலையில் இடம்பெற்ற ஒரு பள்ளிவாசல் பிரச்சினையின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், எமக்கு சிங்களப் பொலிஸார் மீது நம்பிக்கையில்லை. முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்காது என தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு சூழ் நிலையில் மத விடயங்களுக்காக தனிப் பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்படுவதென்பது சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தானை போன்று மத ரீதியான பொலிஸ் பிரிவுகள் ஏற்படுத்தப்படும் பயங்கரமான நிலைமையை ஏற்படுத்துமென்றும் அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்தார்.
Post a Comment