சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தன்னை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் அல்லஹ்ஹாம் திங்கட்கிழமை தெரிவித்தார்.
மேற்படி தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்நாட்டின் பிரஜை என்ற வகையில் பஷாக் ஹாபெஸ் அல் அஸாத்தான் நான் இந்தக் குடியரசின் ஜனாதிபதி பதவிக்கு எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய விரும்புகிறேன் என பஷார் அல் அஸாத்தால் குறிப்பிடப்பட்டிருந்த கடிதத்தை லஹ்ஹாம் பாராளுமன்றத்தில் வாசித்தார்.
அரசாங்க எதிர்ப்பாளர்களை நசுக்க சிரிய அரசாங்கம் பாரிய நடவடிக்கையொன்றை முன்னெடுத்ததையடுத்து எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி மேற்படி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டமை நாட்டில் பெரும் எதிர்ப்பையே தோற்றுவித்துள்ளது.
சிரியாவில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்று வரும் மோதல்களில் 150000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அஸாத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி காலாவதியாகிறது.
இந்தத் தேர்தலில் மேலும் 6 பேர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக அறிவித்துள்ள போதும் அஸாத்தே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment