ஹிஜாப் தடைக்கு விளக்கமளிக்குக: அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவு

Wednesday, April 30, 20140 comments


கொழும்பு ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் பயிலுகின்ற முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து பாடசாலை வருவதை தடைசெய்ய அப்பள்ளிக்கூட நிர்வாகம் எடுத்துள்ள முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றில் விளக்கம் அளிக்குமாறு இலங்கை உச்சநீதிமன்றம் பாடசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அந்த பாடசாலயில் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஃபாத்திமா ரில்வான் எனும் மாணவி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1980 ம் ஆண்டு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ உத்தரவுக்கு அமைய முஸ்லிம் மக்களின் பாரம்பரிய ஹிஜாப் உடை ஒரு பாடசாலை உடையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

எனவே வெள்ளை நிற பஞ்சாப் உடை பள்ளிக்கூடத்தில் அணிவதற்கு எந்த விதமான தடைகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அதே போன்று சம்பந்தப்பட்ட உடையை பாடசாலை உடையாக ஏற்றுக்கொள்ளுமாறு அண்மை காலத்தில் உச்சநிதிமன்றம் கூட தீர்போன்றை வழங்கி இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஹிஜாப் உடையை தடை செய்வதற்கான காரணங்கள் எதுவும் பாடசாலை நிர்வாகத்தினால் அறிவிட்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டும் நோக்கில் இந்த மனு முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை அபிவிருத்தி குழுவினைச் சேர்ந்த சித்ரானந்த கமகே குற்றம் சாட்டினார்.

இஸ்லாமிய இனவாத குழுக்கள் இதன் பின்னணியில் இருக்கிறது என்று அவர் சாடினார்.

சம்பந்தப்பட்ட மனு எதிவரும் மே 13 ம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham