மலேசிய எம்.எச்.370 விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கண்டுபிடிப்பு
Wednesday, April 30, 20140 comments
காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தின் சிதைவுகளை வங்காள விரிகுடாவில் தாம் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய கடல் ஆய்வு கம்பனியொன்று தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி காணாமல் போன மேற்படி விமானத்தை தேடும் நடவடிக்கையை தாம் அதற்கு இரு நாள் கழித்து ஆரம்பித்தாக அடேலெயிட்டை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ஜியோறிஸோனைஸ் என்ற அந்தக் கம்பனி கூறுகிறது.
இந்நிலையில் தற்போது காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 5000 கிலோமீற்றர் தொலைவில் அந்த விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அந்தக் கம்பனி தெரிவித்துள்ளது.
மேற்படி தகவலை ஸ்டார் பத்திரிகையை மேற்கோள் காட்டி பிரெஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா (பி.ரி.ஐ) செய்தி வெளியிட்டுள்து.
செய்மதிகள் மற்றும் விமானங்கள் மூலம் பெறப்பட்ட படங்களைப் பயன்படுத்தி அந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க சாத்தியமான வலயம் நிர்ணயிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக அந்தக் கம்பனியின் பேச்சாளர் டேவிட் போப் தெரிவித்தார்.
அந்த விமானத்தின் பயணம் முடிவடைந்த இறுதி இடத்தை நிர்ணயிக்க 20க்கு மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
தொழில்நுட்பங்கள் அணுஆயுதங்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளதாக டேவிட் போப் தெரிவித்தார்.
இது தொடர்பில் மலேசிய சிவில் விமான திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஸாருதீன் அப்துல் ரஹ்மான் விபரிக்கையில் மேற்படி கண்டுபிடிப்பு தொடர்பில் தாம் அறியவில்லை எனக் கூறினார்.
தாம் அந்த அறிக்கையை பரிசீலிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment