இது தொடர்பாக அவ்வமைப்பின் பொது செயலாளர் வட்டரக்க விஜித தேரர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் வெளியிட்ட இறுவட்டில் குறித்த அமைப்பைச் சார்ந்த ஒருவர், புத்த பெருமான் பிணங்களின் இறைச்சியை சாப்பிட்டுள்ளதாகவும் பௌத்த தர்மத்தின்படி மூவிரத்தினங்கள் என்பது சாதாரண மாணிக்கக்கற்கள் மாத்திரமேயென்று கூறியுள்ளார்.
குறித்த இறுவட்டு தொடர்பாக அவ்வமைப்பு ஊடகங்களுக்கு தெளிவுபடுத்திய போதிலும் இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் காலகொடஅத்தே ஞானசார தேரர் பல முறை எடுத்துரைத்துள்ளதுடன் குறித்த காணொளியினை மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரரிடம் காண்பித்துள்ளார்.
இத்தகைய கருத்தினால் பௌத்தர்கள் நம்பிக்கை கொள்
கின்ற புத்த பெருமான் தர்ம ரத்தினம் மற்றும் சங்க ரத்தினம் (சங்க பீடம்) என்ற மூவிரத்தினத்தின் மீதான நம்பிக்கை இழிவுபடுத்தும் கருத்தாக அமைகிறது.
அதேபோன்று கடந்த 12ஆம் திகதி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இஸ்லாம் மதத்தவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பரிசுத்த அல்-குர்ஆனில் உள்ள அல் தக்கியா என்ற அத்தியாயத்தில் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடைமைகளை பறிக்கும் வகையில் செயல் தொடர்பாக போதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இக்கருத்திற்கு எதிராக முஸ்லிம்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் புத்த பெருமானும் புனித அல்-குர்ஆனும் மற்றைய மதத்தவர்களை தூற்றுவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கவில்லை. மாறாக மத நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது.
அதேபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இதனை கண்டித்துள்ளார். ஜாதிக பலசேனா என்பது அனைத்து மதத்தலைவர்களினதும் இனத்தவர்களினதும் நல்லிணக்கத்திற்கதகவே செயற்படுகின்றது.
இந்நிலையில் நாட்டில் இனக் கலவரமொன்றை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய கருத்துகளை இரண்டு அமைப்புகளும் மீளப்பெற்று நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். எனவே, இவ்விரு அமைப்புகளும் இத்தகைய வேண்டுகோளை நிறைவேற்றுவார்கள் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment