மத விவகாரங்களை ஆராயும் விசேட பொலிஸ்
Monday, April 28, 20140 comments
இலங்கையில் மதங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின்படி அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு இன்று முதல் செயற்படவுள்ளது.
மத விவகாரங்கள் அமைச்சின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்பட வேண்டும் என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இதன்படி அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழு இன்று திங்கள் முதல் செயற்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment