இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து
Wednesday, April 23, 20140 comments
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கான ஒப்பந்தத்திலேயே வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுடன் நேற்று (22) மாலை நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்போது வீரர்களுக்கு 20% பங்குபற்றல் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என மெத்திவ்ஸ் கோரிக்கை முன்வைத்துள்ளார். எனினும் 10% பங்குபற்றல் கொடுப்பனவு வழங்க முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இணங்கியுள்ளது. இதற்கு மெத்திவ்ஸும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நடந்து முடிந்த ரி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றி வீரர்களுக்கும் அதற்கான பங்குபற்றல் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. வெற்றி பணத்தோடு தலா 1,500,000 அமெரிக்க டொலர் ஒவ்வொரு வீரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவன பொருளாளர் நுஸ்கி மொஹமட், தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஏஸ்லி டி சில்வா ஆகியோர் கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தம் குறித்து ஏஞ்சலோ மெத்திவ்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment