கெசீனோ சூதாட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில்
Sunday, April 20, 20140 comments
முலோபாய அபிவிருத்தி சட்ட மூலத்தின் கீழ் கெசீனோ சூதாட்டம் இல்லாத விருந்தகத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான மூன்று வர்த்தமானிகள் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அரசாங்க அமைச்சர் தினேஸ்குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இந்த வர்த்தமானிகள் எதிர்வரும் 24 மற்றும் 25ம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பெக்கரின் க்ரவுன் நிறுவனத்தினால் கொழும்பு டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள விருந்தகம் தொடர்பமான வர்த்தமானியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment