48 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 17 பேர் பலி; 15 பேர் காயம்
Sunday, April 20, 20140 comments
நாட்டின் மூன்று இடங்களில் கடந்த48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற பாரிய விபத்துச் சம்பவங்களின் போது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்துக்கும் திஸ்ஸ மஹாராைமக்குமிடையே பயணித்த வாகனமொன்று குளத்தில் பாய்ந்ததில் ஐவரும் பொலன்னறுவை அரலகங்வில அளுத்ஓயா பிரதேசத்தில் சிறிய ரக டிரக்டர் ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 10 பேரும் திருமலையில் கடற்படை ட்ரக் ஒன்று தலைகீழாகப் புரண்டதில் இருவருமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் 15 பேர் காயமடைந்தனர். இதேவேளை கண்டியிலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றவர்கள் பய ணம் செய்த வாகனமொன்று குளத்தில் பாய்ந்ததில் ஐந்து பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கண்டியிலிருந்து புறப்பட்ட இந்த வேன் கதிர்காமத்துக்கும் திஸ்ஸமஹரவுக்குமிடையேயுள்ள டென்ட்வெவ என்ற இடத்தில் நேற்று சனிக்கிழமை அதிகாலை 5.10 மணியளவில் வீதியைவிட்டு விலகி குளத்தில் பாய்ந்துள்ளதாகவும் இந்த விபத்தில் இரு ஆண்களும் மூன்று பெண்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் ஐந்தரை வயதான சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான்.
இதேவேளை, புதுவருடத்துக்கென உறவினர் வீட்டுக்கும் சென்றவர்கள் பயணித்த சிறிய உழவு இயந்திரமொன்றும் குளத்திலும் பாய்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் சம்பவம் பொலனறுவை அரலகங்வில அளுத்ஓய பிரதேசத்தில்
வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. பலியான பத்துப் பேரில் நான்கு சிறுவர் சிறுமிகளும் அடங்குவர். அத்துடன் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருகோணமலை மதுரங்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற கடற்படை டிரக் விபத்தில் இரு கடற்படையினர் உயிரிழந்துடன் நால்வர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment