119 நாட்களாக தொடரும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்
Tuesday, April 22, 20140 comments
நான்கு வருட மருத்துவ இணை சுகாதார பட்டப்படிப்பை ரத்து செய்ய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் 119 நாட்களாக முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு மேலதிகமாக உயர்கல்வியமைச்சின் முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக நடவடிக்கை தற்போது நான்கு இடங்களில் விஸ்தரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கலஹா சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக நடவடிக்கை 119 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதுதவிர, காலி பேருந்து தரப்பிடம், கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் சத்தியாக்கிரம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனிடையே. மருத்துவ இணை சுகாதார பட்டப்படிப்பை ரத்து செய்தமைக்கு எதிராக உயர்கல்வியமைச்சுக்கு முன்பாக கடந்த 16 நாட்களாக அடையாள சத்தியாக்கிரக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment