வீரர்களின் விருப்பம் குறித்து கவனம்
Tuesday, April 22, 20140 comments
கிரிக்கட் அணியின் போட்டியாளர்கள் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளார்களா என்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதனிடையேடு, இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் போல் பாஃபிரேஸ்ஸை தொடர்ந்தும் அதே பணியில் ஈடுபடுத்துவதா என்பது குறித்தும் இன்று ஆராயப்படவுள்ளது.
இந்த இரண்டு விடயங்கள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்கு சிறிலங்கா கிரிக்கட் நிறைவேற்று குழு இன்று மாலை கூடவுள்ளது.
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் ஊடாக, போட்டி சுற்றுகளின் போது போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு சதவீதத்தை அதிகரிக்குமாறு கிரிக்கட் போட்டியாளர்கள், சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருந்தபோதும், அது தொடர்பில் இறுதி முடிவு இதுவரை எட்டப்படவில்லை.
கிரிக்கட் போட்டியாளர்களுக்கும், கிரிக்கட் நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம் அமுலுக்கு வராத பட்சத்தில் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுலாவின் போது பிறிதொரு அணியை பங்கேற்க வைப்பதற்கான ஏதுநிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment