கல்விக்காக நீங்களும் உதவிடுவீர்

Thursday, December 18, 20140 comments


மூதூர் வலய பாடசாலைகளில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஆரம்பம்.

-தலைவர், மூதூர் பியுச்சர் லீடர்ஸ் போரம்-  


மூதூர் பியுச்சர் லீடர்ஸ் போரம் ஏற்பாட்டில், மூதூர் பிரதேச இளம் சிறார்களின் எதிர்கால கல்வி நலனைக் கருத்திற்கொண்டு  மூதூர் வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கின்ற வறிய மாணவர்களுக்கு ரூபா.1000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது. இந் நிகழ்ச்சித் திட்டம் இம்மாதம் 31 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளதாக இவ் அமைப்பின் தலைவர் வீ.எம்.எம்.ஹஸீன் தெரிவித்துள்ளார்.

இப்பெறுமதியான சமூக சேவைக்காக தனவந்தர்கள்,வெளிநாட்டில் தொழில்புரியும் உறவுகள், சமூக ஆர்வலர்கள்,வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்களிடம் இருந்து முடியுமான உதவிகளைப் பணமாகவோ அல்லது பொருளாகவோ பெற்று இந் நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு இவ் அமைப்பு முன்வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆகவே நாட்டின் எப்பகுதியில் வசிப்பவராக இருப்பினும் உங்களால் இத்திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். குறைந்தது ஒரு அப்பியாசக் கொப்பியையேனும் வழங்கி இத் திட்டத்தையும், எதிர்கால சந்ததியையும் வளமாக்க அனைவரும் கைகொடுக்குமாறு இவ் அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

தொடர்புகளுக்கு :
கல்வி இணைப்பாளர்  - ரிப்கான் 0775569226        
நிதிப் பொறுப்பாளர் - இப்திகார் 0754427718        
 கல்விக் குழு    - சப்ரி  0771167660    
 கல்விக் குழு - ரிழ்வான் 0755599374

   
                                       
வங்கிக் கணக்கு இலக்கம் - 095200110021366 ( மக்கள் வங்கி )
ஏற்பாடு:மூதூர் பியுச்சர் லீடர்ஸ் போரம்



Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham