ஆறுமுகம் கட்சிக் காரர்களும் மைத்திரி பக்கம்
Thursday, December 25, 20140 comments
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் கங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் கைகோர்த்துள்ளனர்.
அக் கட்சியின் உபதலைவர் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினரான உதய குமார் மற்றும் நுவரெலிய பிரதேசசபை உறுப்பினர் நாகராஜன் ஆகிய இருவருமே இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து கொண்டுள்ளனர்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளனர்.
மேலும் தற்போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் நிதிக்கொள்கைகளுடன் முரண்பட்ட நிலையில் கட்சியின் நடவடிக்கைகளில் இருந்து உதயகுமார் விலகியிருந்தார்.
இந்தநிலையிலேயே இன்று அவர் மைத்திபால சிறிசேனவுக்கான ஆதரவை வெளியிட்டுள்ளார். மலையக மக்களின் கல்வி உட்பட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையில் தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையை அடுத்தே அவருக்கு தாம் ஆதரவு அளிப்பதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment