மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் சல்மன் கான்

Friday, December 19, 20140 comments


பாலிவுட் பிரபல நட்சத்திரம் சல்மன் கான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர், நாமல் ராஜபக்ஸவினால் சல்மன் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஸ, சல்மன் கானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் சல்மன் கான் இதுவரையில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சல்மன் கான், இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வார் என ஆளும் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சல்மன் கான் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பங்களிப்பு வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham