எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தான்
மேற்கொண்ட தீர்மானம் தன் வாழ்விலேயே கடினமான தீர்மானமாகும் என பிரதி
அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகவாழ்வு தொடர்பில் சிந்தித்தே இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக
குறிப்பிட்ட அவர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய யுக புருசர் எனவும்
கூறியுள்ளார்.
தான் ஒன்பது வருடங்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்ததாகவும் எனவே அது பற்றி
தான் விமர்சிக்கவில்லை எனவும் பைஸர் முஸ்தபா இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதித்
தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு
அளிப்பதாக இன்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment