இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹாஜிகளிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக் கொண்ட போதும் இதுவரை விசாரணைக்கான குழு நியமிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
ஹஜ் கடமைக்காக அழைத்துச் சென்ற முகவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்பாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு பணிப்பாளர் அறிவித்திருந்தார்.
இம்முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை அமைப்பதாக ஹஜ் ஜுக்கு பொறுப்பான அமைச்சர் பௌஸி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பணிப்பாளர் ஸமீலிடம் வினவிய போது ஒரு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
விசாரணைக்கான குழு இன்னும் நியமிக்கப்படவில்லை. இரண்டொரு தினத்தில் குழுவை நியமிக்கவுள்ளதாக கூறினார். ஹஜ்ஜின் போது முகவர்கள் அழைத்துச் சென்ற குழுக்களை மேற்பார்வை செய்து விபரங்களை பெற்றுக் கொண்ட திணைக்கள பிரதிநிதிகளும் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Post a Comment