பிரதமரின் செயலாளர் எதிரணியில்
Wednesday, December 24, 20140 comments
பிரதமரின் இணைப்புச் செயலாளர் பி.டி.நுகலியத்த இன்று (24) கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல இல்லத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
2009ம் ஆண்டில் இருந்து பிரதமர் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியதாகவும் 2013 மாகாண சபைத் தேர்தலில் அதிக விருப்பு வாக்கு பெறுபவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்த நிலையில் அதிக விருப்பு வாக்கு பெற்று பிரதமரின் மகனுக்கு அமைச்சுப் பதவிகூட கிடைக்கவில்லை என பி.டி.நுகலியத்த குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மாகாணத்திற்கு ஒரு சட்டம் ஹம்பாந்தோட்டைக்கு ஒரு சட்டம் என்றும் சபாநாயகரின் மகனுக்கு முதலமைச்சர் பதவி வழங்க முடியுமானால் பிரதமர் மகனுக்கு ஏன் வழங்க முடியாது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் இரண்டாவது பிரஜையான பிரதமருக்கு செய்ய முடியாததை ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் செய்ய முடிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐதேகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று அரசாங்கத்தில் கறிவேப்பிள்ளை, இரம்பை போன்று உள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனவை கம்பளை ஆசனத்தில் வெற்றிபெறச் செய்ய வெட்டினாலும் நீலம் என்று சொன்னவர்கள் தயாராகி வருவதாகவும் தான் விலகுவதை தடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் பி.டி.நுகலியத்த தெரிவித்தார்.
Post a Comment