ஐ.தே.க. வில் இணைந்தார் சேகு இஸ்ஸதீன்

Sunday, December 7, 20140 comments


முன்னாள் தகவல் ஊடகத்துறை பிரதியமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார். ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் கடந்த வாரம் சேகு இஸ்ஸதீனை இறக்காமத்தில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

முஸ்லீம் காங்கிரசின் இருந்து விலக்கப்பட்ட பின்னர் 1996 ஆண்டில் ஜ.தே.கட்சி எம்.பியாக சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர்  சந்திரிகா அரசாங்கத்திலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் தேசியப்பட்டியல் எம்.பியாக நியமிக்கப்பட்டவர் இவர் பிரதியமைச்சர், அமைச்சராகவும் பணியாற்றியவர்.

வட கிழக்கு மாகாணசபையின் முன்னளர் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் பதவி வகித்த காலத்தில் மாகாணசபையின்  எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டார். முஸ்லீம் காங்கிரசின் ஸ்தாக தவிசாளாராகவும் சேகு இஸ்ஸதீன் பணியாற்றியவர்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham