முஸ்லிம் காங்கிரஸின் முடிவு நாளை மறுதினம்?
Thursday, December 18, 20140 comments
ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் நாளை மறுதினத்திற்குள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து அந்தத் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் என முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது பிளவுபட்டுக் காணப்படுவதாக தெரிகிறது.
ஒருசாரார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றொரு சாரார் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவளித்து வருகின்றனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் அந்தக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரின் கூட்டம் நாளை அல்லது நாளை மறுதினம் நடைபெறும் வேளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இம்மாத இறுதிக்குள் தாம் யாரை ஆதரிக்கப் போகின்றோம் என்பதை தெரிவிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment