ஆட்சி மாற்றத்திற்காண தேவையை இன்று மக்கள் உணர்ந்துள்ளனர் - சட்டத்தரணி சுஹைர்

Friday, December 26, 20140 comments


எமது நாட்டில் உடனடி ஆட்சி மாற்றம் ஒன்று தற்போது தேவை பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர் என தெரிவித்த தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம் சுஹைர் இதனாலேலே மைத்திரிக்கான ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாக சுட்டிக்காட்டினார்.

பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து தேசிய ஐக்கிய முன்னணியின் தலைமையில் நேற்று இலங்கை தேசிய கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் உரையாற்றிய அவர்,

இலங்கை மக்கள் பல வகையிலும் சிறமங்களை எதிர்நோக்குகின்றமையினால் ஆட்சி மாற்றமொன்றை எதிர்ப்பார்க்கின்றனர். இது இன மத பேதமின்றி எல்லா மக்களுக்குமான பொதுவான பிரச்சினையாகவே இருக்கின்றது. இதனாலேயே இன்று மைத்திரி பாலசிறிசேனவிற்கு நாடெங்கிலும் பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. அத்துடன் நாளுக்குநாள் அவருக்கான ஆதரவும் அதிகரித்தே செல்கின்றது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மேலோங்கியிருக்கின்றன. இதனால் முஸ்லிம்கள் மிகுந்த மனவேதனையடைந்துள்ளனர். இதனால் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டைகொண்டுள்ளனர்.

இன்று மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைகள் தொடர்பில் மக்கள் தெ ளிவின்றி இருக்கின்றனர். அவரின் தேர்தல் விஞ்சாபனம் முழுமையானதாகும். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலேயே நாம் அவரை ஆதரிக்கின்றோம். முஸ்லிம்களும் அவரின் கொள்கை பிரகடனத்தை படிக்கவேண்டும். பூரண விளக்கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

'எனது ஆட்சியின் கீழ் எந்த மதவாத சக்திகளுக்கும் இடமளிக்கப்போதில்லை ' என மைத்திரிபால சிறிசேன குறிப்பிடுகின்றார். அவரை நம்பலாம்.
அவரின் ஆட்சியில் தற்போது முஸ்லிம்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும். எனவே ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்து மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham