ஊழல் குற்றவாளிகள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க மாட்டேன்: மைத்திரிபால

Tuesday, December 16, 20140 comments


ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் பலர் உள்ளனர்.

ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் எவரையும் நாட்டை விட்டு வெளியேற நான் அனுமதிக்கமாட்டேன் என்றார்.

அதேபோல், தான் அரசாங்கத்தில் இருக்கும் போது ஊழலுக்கு எதிராக பேசுவது தடுக்கப்பட்டமையையும் நினைவூட்டினார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham