மஹிந்தவின் அப்பாவும் பண்டாரநாயக்காவும் சமமானவர்களா? ஆசாத் சாலி கேள்வி

Sunday, December 21, 20140 comments


எஸ். டப்ளி. ஆர்.டி. பண்டார நாயக்காவையும், டீ.ஏ.ராஜபக்ஷவையும்; சமமான தரத்தில் வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் இருவருக்குமிடையே நீண்ட இடைவெளி இருப்பதாக தேசிய ஐக்கிய கூட்டணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத் சாலி தெரிவித்தார்.

(20.12.2014) மடவளை பொல்கொல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவா இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

இன்று எங்கு பாhத்தாலும் ராஜபக்ஷ முகங்களே உள்ளன. மின் கம்மங்கள் தோரும் முச்சந்திகள் வழயேயும் ராஜபக்ஷ களின் முகங்களே உள்ளன. ஒரு சிறு பாதை போடப்பட்டாலும் அங்கும் அதனையே காண முடியும். இதன் காரணமாக இப்போது டி. ஏ.ராஜபகடஷ அவர்களுக்கும் அம்பாந்தோட்டையில் சிலை எடுக்க உள்ளனர். பண்டார நாயக்காவிற்கு பல இடங்களில் சிலை உண்டு. அதுபோல் இதனையும் செய்ய முயற்சிக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமான தரம் உடையவர்கள் அல்ல.

ஆண்மையில் ஒரு மேடையில் பேசியதாக தொலைக்காடசசியில் பார்த்தேன். நான்கு மாதக் குழந்தை ஒன்றைக் கையில் எடுத்த போது அது மகிந்த ராஜபக்ஷேட ஜயவேவா என்று கூறியதாம். நூன்கு மதக் குழந்தைக்குக் கூட அவரைத் தெரியும் என்றால் ஏன் இந்தளவு கட்டவுட்கள் போடப்படவேண்டும். ஒவ்வnhரு மரத்திலும் ஏன் அப்படியான படங்கள் தொங்க விடப்பட வேண்டும் எனக் கெட்க விருமபுகிறேன். ஏதைப் பேசுவது எப்படிப் பேசுவது என்று கூடத் தெரியாமல் சிலர் இன்று வார்த்தை தவறுகின்றனர்.

இன்று எங்கு பார்த்தாலும் ‘ராஜபக்ஷ சர்வதேச’ என்ற அடைமொழியைக் காண்கிறோம். சர்வதேச ராஜபக்ஷ மைதானம், சர்வதேச ராஜபக்ஷ கலை அரங்கு, சர்வதேச ராஜபக்ஷ விமான நிலையம், சர்வதேச ராஜபக்ஷ இறங்கு துறை என்று பல உள்ளன. ஒன்றை மட்டும் காண முடியவில்லை. அதுதான் சர்வதேச ராஜபக்ஷ மயாணம். அதனையும் நிறுவி விடுவது பொருத்தமானது

அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களது நிலையைப் பாருங்கள். ஒரு அமைச்சரின் மனைவி மாதாந்தம் 50 இலட்ச ரூபா ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்தார். இந்த நிமடமே அதனை வழங்குகிறேன் என அந்த அமைச்சர் கூறினார். ஆனால் இவர்கள் 1980 களில் ஆயிரம் ரூபாவிலும் குறைந்த சம்பளத்தில் வேலைசெய்ததாக நீதி மன்;றில் கூறி இருந்தனர்.

இன்னொறு அமைச்சர் 450 மில்லியன் ரூபாவிற்கு மேல் ஊழல் செய்தள்ளதாக கோப் அறிக்கை கூறியது. இது தொடாபாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் உடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்படி ஊழல் புரிபவர்களுக்கு புகழிடம் வழங்கும் ஒரு இடமாக அமைச்சரவை மாறியுள்ளது.

ஒரு பொதுச் செயலாளர் சென்றார். இன்னொரு பொதுச் செயலாளரைப் பெற்றுக் கொண்டோம் என்று கூறுகின்றனர். எப்படி திஸ்ஸ அத்நாயக்காவும், மைந்திரிபாலவும் சமமாக முடியும். 29 தேர்தல்களை வெற்றி கொண்ட ஒரு கட்சியின் செயலாளர் எம்முடன் உள்ளார். 29 தேர்தல்களில் தோல்வி அடைந்த கட்சியின் செயலாளரை அவர்கள் வாங்கி உள்ளனர். அது மட்டு மல்ல பொதுத் தேர்தல்களில் 15 ஆயிரம் வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தவர் அவர். ஆனால் இன்று எம்முடன் இணைந்து வரும் எல்லோரையும் விட்டு விட்ட மைந்திரிபால சிரி சேன உடன் வந்து எட்டுப் பேர்கள் மட்டும்பெற்றுக் கொண்ட விருப்பு வாக்ககள் எட்டு இலடசத்திற்கும் அதிகமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஐ.தே.க. யினராகும். இன்று எமது மேடையில் இருக்கும் சரத் பொன்சேக்கா விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உற்பட்டவர். சுந்திரிகா அம்மையாரும் ஒரு கண்ணை இழந்தார். ஐ.தே.க. தவைர்களான பிரேமதாச. காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத் முதலி, பிரேமச்சந்திர என்று பலர் உள்ளனர். அப்படியான ஒலு கட்சி புலிகளை மீண்டும் நாட்டினுள் அனுமதிக்குமா?.

ஆனால் தலதா மாளிகையில் தாக்குதல் நடத்திய பிள்ளையானும், 30 ற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளைக் கொலை செய்தவர்களும், புலிகளின் பிராந்தியத் தலைவராக இரந்த கருணா அம்மான் மற்றும் புலிகளின் ஆயுதக் கொள்வன வாளரான கே.பி. போன்றவர்கள் இன்று அரசில் இணைந்துள்ளனர். எனவே புலிகளுக்கு அங்கீகாரம் வழங்குவொர் நாங்களா? அரசா என்று கெட்க விரும்புகிறேன் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham