பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று இரவு பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் தற்பொழுது நிலைமை சீரடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அங்கிருந்து வெளியேறும் போது ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜெமீலின் வீட்டிற்கு முன்னால் ஆளுமை கட்சி ஆதரவாளர்கள் சிலர் சந்திரிகா மற்றும் ஹிருணிகா ஆகியோரது வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடாத்தியுள்ளார்.
குறித்த தாக்குதலில் இப்திகார் ஜமால் தாக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் நகர சபை உறுப்பினர் டஹ்லான் மன்சூர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஹிருனிகா ஆகியோருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
Post a Comment