சித்ரா மந்திலக்க ஜனாதிபதிக்கு ஆதரவு
Saturday, December 27, 20140 comments
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர் சித்ரா மந்திலக்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
இன்று காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
63 வயதான சித்ரா ஶ்ரீமதி மந்திலக கடந்த மாகாண சபைத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மத்திய மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment