கொழும்பு மாநகர முன்னாள் ஆணையாளர் உமர் காமில் மைத்திரியுடன்
Thursday, December 25, 20140 comments
கொழும்பு மாநகர முன்னாள் ஆணையாளரும் மேயருமான ஒமர் காமில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து நேற்று கொழும்பில் இடம்பெற்ற பிரச்சார கூட்டமொன்றில் கலந்துகொண்டார்.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தலைமையில் நேற்று இலங்கை தேசிய கண்காட்சி மண்டபத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே முன்னாள் ஆணையாளர் ஒமர் காமில் இணைந்துகொண்டார்.
1997 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியூடாக கொழும்பு மாநகர உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அவர் 1997 ஆம் ஆண்டு தொடக்கம் 2002 ஆம் ஆண்டுவரை கொழும்பு மாநகர மேயராக செயற்பட்டர். பின்னர் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டார்.
2009 ஆண்டு கொழும்பு மாநகர சபை சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் மாநகரசபை கலைக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதியினால் ஒமர் காமில் கொழும்பு மாநகரசபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கொழும்பு மாநகர சிரேஷ்ட நிருவாகியாகவும் செயற்பட்டார். இந்நிலையிலேயே அவர் தற்போது எதிரணியுடன் இணைந்து பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றார்.
Post a Comment