''முஸ்லிம் தலைமைகளுக்கு அறைகூவல்''

Tuesday, December 16, 20140 comments


முஸ்லிம்களும் ஏனைய இன மக்களும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் இணைந்து செயற்பட முன்வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்றுப் ஆகியோர் அறைகூவல் விடுக்கின்றனர்.

சாய்ந்தமருது முஸ்லிம் வர்த்தக சமூகத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.

ஏ.ஆர்.எம்.அசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

கூட்ட மண்டபம் மக்களினால் நிரம்பி வழிந்ததுடன் மண்டபத்திற்கு வெளியேயும் சன நெரிசல் காணப்பட்டது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham