இலங்கைக்கு வந்தபோது அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் இவர்களுடன்
இணைந்து செயற்படலானார்கள்.
கற்குகைகளில் வாழ ஆரம்பித்த இவர்கள் மக்களிடம் யாசித்து, உண்டு
மிகவும் ஏழ்மையாகவே வாழ்ந்தனர். நாடு பூராவும் சென்று மதப்
பிரசாரத்திலும் போதனையிலும் ஈடுபட்டனர்.

அவர்களின் போதனையில் ஆகர்ஷிக்கப்பட்ட மக்கள் புதிதாய் நாட்டுக்கு
வந்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். திஸ்ஸ மன்னன் மீது மக்களுக்கு இருந்த
வரவேற்பும் கூட மக்கள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்ள பிரதானமான
காரணமாக அமைந்தது.
எல்லா கோத்திரங்களையும் இணைத்து சிங்கள சமூகத்தை கட்டியெழுப்ப
காரணமாக பௌத்த மதம் தொழிற்பட்டமையும்கூட மக்களுக்கு பௌத்த
மதத்தின் மீது சிறந்த வரவேற்பு ஏற்பட்டது.
புத்த மதத்தின் வருகைக்கு முன்னர் இலங்கையில் இருந்த கோத்திரங்கள்
என்ன மதத்தைப் பின்பற்றினர் என்பது தொடர்பில் வரலாற்றாசிரியர்கள்
பின்வருமாறு ஒரு பதிவைத் தருகின்றனர்.
கிறிஸ்து வருடம் ஆரம்பிக்க 500 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில்
இருந்து மக்கள் இலங்கையில் வந்து குடியேறினர். இதனால் மக்கள்
அக்காலப்பகுதியில் வட இந்தியாவில் காணப்பட்ட மதத்தையே
பின்பற்றி இருக்க வேண்டும்.
அந்தக் காலப்பகுதியில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய காவியங்களில்
பின்பற்றப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்
அக்காலப் பகுதியில் முன்னணியில் திகழ்ந்த மதங்களாகும்.
இந்த வரலாற்றுக் கதைகளை மையமாகக் கொண்ட சில கடவுள்களை இலங்கையில்
வாழ்ந்தோரும் ஏற்று வணங்கியமைக்கான சில கல்வெட்டு ஆதாரங்களை காண
முடிகிறது.
பௌத்த மதத்தின் வருகைக்குப் பின்னர் ஏற்கெனவே நாட்டில் இருந்த
மதங்களுடன் பிரச்சினைகள் ஏற்பட்டமைக்கான சான்றுகள்
காணப்படவில்லை.
பௌத்த மதம் நாட்டில் பரவிய போதிலும் பிராமண குலத்தைப் பின்பற்றிய
சிலரும் நாட்டில் இருந்துள்ளனர். இவர்கள் அரச சபையிலும் உயர்
பதவிகளை வகித்தமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றன.
அதேபோல் அதற்குப் பின்னரும் இலங்கையில் வந்து குடியேறிய அதிகமானோர்
பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல் தமிழ் இந்துக்களும் முஸ்லிம்களும் தமது மதத்தைப் பின்பற்றி
தமது தனித்துவங்களோடு நாட்டில் வாழ்ந்தனர்.
வட இந்தியாவில் இருந்து ஆரிய மொழி பேசும் ஒரு குழுவும் தென்
இந்தியாவில் இருந்து தமிழ் பேசும் மக்கள் குழுவும் இலங்கைக்கு
வந்தனர். தென்னிந்திய மக்களுக்கும் இலங்கைக்கும் மிகத் தொன்மையான
வரலாற்று உறவு இருந்துள்ளது.
விஜய மன்னன் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் வம்சத்தைச் சேர்ந்த ஒரு
பெண்ணை மணந்ததாகவும் அந்த அரசியுடன் நூறு கன்னியரும் பதினெட்டு
குலங்களைச் சேர்ந்த ஆயிரம் குடும்பங்களும் இலங்கையில் வந்து
குடியேறியதாகவும் வரலாற்றுக் கதைகள் சான்று பகர்கின்றன.
கிறிஸ்தவ வருடத்தின் மூன்றாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில்
சேன மற்றும் குத்திக என்ற இரண்டு தமிழ் தலைவர்கள் சுமார் இருபது
ஆண்டுகள் அநுராதபுர இராஜியத்தை ஆட்சி செய்ததாகவும் அடுத்த
நூற்றாண்டில் எல்லாளன் மன்னர் 40 வருடம் அநுராதபுரத்தை ஆட்சி
செய்ததாகவும் வரலாறு சான்று பகிர்கிறது.
இந்தக் காலப்பகுதி வரும் போது இந்து மதத்தை பின்பற்றிய மக்கள் நாட்டில்
வாழ்ந்து கொண்டு தான் இருந்துள்ளனர் என்பதை வரலாற்றில் இருந்து புரிந்து
கொள்ள முடிகிறது.
தொடரும்....
Post a Comment