மஹிந்த ராஜபக்ஸவின் ”பைல்” 20 அடி உயரமானது:அசாத் சாலி

Sunday, December 14, 20140 comments


மஹிந்த ராஜபக்சவின் வசமுள்ள பைகல்களுக்கு அஞ்சுபவர்கள் மகிந்த ராஜபக்சவின் பைல் 20அடி உயராமானது என்பதை மறக்க வேண்டாம் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.

அம்பாறை, சம்பாந்துறையில் நடைபெற்ற பிரசார கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை  முஸ்லிம் மக்களை பொருத்தவர 95வீத முஸ்லிம் மக்கள்  மஹிந்த ராஜபக்சவின் அரசை ஒழித்து மைத்திரியின் அரசை கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் கடவுளுக்கு மாத்திரம் பயப்பிடுவதாக தெரிவித்த அசாத்சாலி அமைச்சர்கள் தமது பைல் குறித்து கவலைப்படுகின்றனர் என்றும் அவர்களின் பைல்கள் ஒரு இன்ஞ் அளவு என்றால் மகிந்தவின் பைல்கள் 20 அடி உயரமானது என்று குறிப்பிட்டார்.

நூற்றுக்கு 55க்கு 60வீதம் மைத்திரிபால சிறிசேன வாக்குகள் பெற்று 9 ஆம் தேதி இந்த நாட்டுல ஜனாதிபதியா வருவார் என்றும் அசாத்சாலி இதன்போது மேலும் தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham